என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊத்துக்கோட்டை மழை"
திருவள்ளூர்:
வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டியது. அதிகபட்சமாக 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.
இதேபோல மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, ஊத்துக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. அதிக பட்சமாக ஊத்துக்கோட்டையில் 12.4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பெரியபாளையம் அருகே ராஜபாளையம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கனமழையால் இதன் அருகே உள்ள மாற்றுப்பாதை சேறும் சகதியாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஆவடியில் இருந்து மெய்யூர் நோக்கி வந்த மாநகர பஸ் இந்த சேற்றில் சிக்கிக் கொண்டது.
இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும் வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் கிராம மக்கள் டிராக்டர் மூலம் பஸ்சை இழுத்து மீட்டனர். இதன் பிறகு அப்பகுதியில் போக்கு வரத்து சீரானது.
பொன்னேரி பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி கிடக்கிறது.
தடப்பெரும்பாக்கத்தில் விவேகானந்தர் தெரு. ராஜீவ் காந்தி தெரு, அம்பேத்கர் தெருக்களில் சுமார் 50 வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் பொன்னேரி என்.ஜி.ஓ. காலனி, பள்ளம், வேன்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
சென்னையில் இன்று காலை சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. #Rain
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 மாதம் காலமாக கடும் வெயிலின் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொது மக்கள் பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயிலின் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பல ஆழ்துளை கிணறுகள் வற்றி விட்டன. தற்போது பெய்துள்ள பலத்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #Rain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்